ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ந் தேதியை தேசிய குழந்தைகள் தினமாக நமது நாடு கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டங்களெல்லாம் வரலாறு படைக்கும் சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறதா? என்ற சிந்தனையோடும், இரக்கத்தின் ஆண்டில் நமது குழந்தைகள் இரக்க உணர்வோடு வாழ குழந்தைகள் உருமாற்றம் பெறுவதற்கு இந்த ய10பிலி ஆண்டு துணைபுரிந்திருக்கிறதா? என்பதையும் இந்தக் காலக்கட்டத்தில் சிந்தித்து பார்க்க கடமைப் பட்டவர்களாக எண்ணிப்பார்ப்போம்.
அமெரிக்காவில் கோடை காலத்தில் குழந்தைகள் தங்களது விடுமுறையை தங்களது சுய சம்பாத்தியத்தில் கழித்திட எலுமிச்சை பானக் கடை வைத்து விற்பனை செய்வது மரபு. (lemonade stand) 1996ல் அமெரிக்காவின் அலெக்சாந்ரா ஸ்காட் பிறக்கும் போதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவராக பிறக்கிறார். 2000ம் ஆண்டில் தனது 4வது வயதில் தனது தாயிடம் எலுமிச்சை பானக் கடை வைத்து தன்னைப் போன்று புற்றுநோயால் பாதிக்கபட்டகுழந்தைகளுக்கு உதவிட விரும்புவதாக கூறினார். முதல் நாளிலேயே 2000 டாலர் சம்பாதிக்கிறார். 4 ஆண்டுகளில் கிடைத்த 1கோடி டாலரையும் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு சம்பாதித்து கொடுத்தார். தனது 8 வயதில் ஆகஸ்ட்மாதம் 24ந் தேதி இறந்து போகிறார். ஆனால் இன்று ஒவ்வொரு ஜீன் மாதமும் வாரத்தின் கடைசி நாட்களில் ‘அலெக்ஸின்’ பேரில் எலுமிச்சை கடை நடத்தி உலகத்திலுள்ள புற்றுநோயாளிகளுக்காக உலகளவில் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த குழந்தையின் இரக்க முகத்தினைதான் அட்டை படத்தில் காண்கிறீர்கள்.
பில்லிகிரகாஹாம் சொல்வதைப்போல "இன்றைய குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டியது நாம் சம்பாதித்த சொத்துக்களையோ, பொன்னையோ, பொருளையோ அல்ல, மாறாக எதிர்காலத்தின் மீதும், வாழ்வியல் கோட்பாடுகள் மீதும் கொள்ள வேண்டிய நம்பிக்கையும், நல்ல பழக்கவழக்கங்களும் மட்டுமே."
இத்தகைய குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இந்த பூமி பந்தின் ஏதோ ஒரு மூலையில் வரலாறு படைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆதலால் தான் இன்று இந்த உலகம் நம்பிக்கையோடு பயணமித்துக் கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் குழந்தைகளின் வாழ்வினை சீரழிக்கும் கலாச்சாரம் ஓய்;ந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் தெருவில் நடந்து செல்கிறபோது பிச்சை எடுக்கும் குழந்தைகள். வெயில், என்று மழை என்றும் பாராமல் ஒரு சாண் வயிற்றுக்கு சிறு பொருட்களை வியாபாரம் செய்யும் அன்றாடம் காய்ச்சிகள். இவைகள் எல்லாம் நாம் ஒவ்வொரு நாளும் கண்கூடாக காணும் காட்சிகள். கண்டுகொள்ளப்படாத எதார்த்தமான உண்மைகள். ஆனால், வரலாறு படைக்கும் எண்ணத்தோடு பார்க்கின்றபோது. பாரதியார் கவிதைதான் நினைவிற்கு வருகிறது.
“”தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து, - நரை
கூடி கிழப்பருவமெய்தி - கொடும்
கூற்றுக் கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போல - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
- பாரதியார்
இயேசுவின் தோழமையில்
அருட்பணி. பால்பிரிட்டோ
ஆசிரியர்

Spiritual Category
Religious Category