அர்ப்பண உணர்வுள்ளவர்களாக !

இறையேசுவில் பிரியமானவர்களே இந்தியாவில் கிறித்தவம் இன்றுவரை நிலைத்து நிற்பதற்கு காரணம் துறவறத்தாறும் அவர்களது பணிகளுமே.


இந்தியாவின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பல்வேறு சமயத்தைச் சார்ந்த பலதரப்பட்ட மக்களுக்கு தூண்டுகோலாக இருந்தது இன்றைய துறவற சபையின் அர்ப்பண உணர்வே. துறவற ஆண்டினைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வேளையிலேயே அவர்களின் அர்ப்பண உணர்வு போற்றப்படவேண்டியதே. உதாரணமாக முன்னாள் குடியரசு தலைவர் A. P. J. .அப்துல்கலாமின் இலக்கினை நோக்கிய பயணத்தில் இத்தகைய துறவறத்தாரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதே. அறியாமை என்னும் இருளை போக்கிய பெருமையும் இவர்களையே சாரும்.


இந்தியாவிற்கு ஏழைகளின் மீதும் கைவிடப்பட்டோரின் மீதும் கொள்ள வேண்டிய அக்கறையைத் கற்பித்தது அன்னை தெரசாள்தான். இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்தாலும் பெரும்பான்மையான நல்ல விழுமியங்களை இவ்வுலகிற்கு காலத்தின் சூழலுக்குத் தகுந்தவாறு திருச்சபையிலும் இவ்வுலகிலும் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தவர்கள் இத்துறவறத்தாறே. இத்தகைய துறவறத்தாரின் அர்ப்பண உணர்வினை நாமும் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்பதற்காகவே திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு அழைப்பு விடுத்துள்ளார். கத்தோலிக்கத் திருச்சபையில் கிறித்தவர்களாக இருக்கின்ற ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துறவறத்தார் தங்களது நேர்மறையான வாழ்வு முறையினால் கண்டிப்பாக ஈர்க்கப்பட்டிருப்பர். இத்தகைய சூழலி;ல் அர்ப்பண உணர்வோடு பணிபுரிகின்ற துறவற சகோதரிகளும்ää சகோதரர்களும் அச்சுறுத்தப்படுவதும் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுவதும் யதார்த்தமானவையாக உள்ளன. இருப்பினும் வாழ்வது நானல்லää என்னில் வாழ்வது கிறிஸ்துவே என்ற தூய பவுலின் இறைவார்த்தைக்கு இணங்க ஒவ்வொரு நாளும் தங்களது பணியில் சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்து துணிச்சலோடு பணிபுரியும் ஒவ்வொரு துறவறத்தாருக்கும கத்தோலிக்கு சேவை நன்றி சொல்லி மகிழ்கின்றது. மதுரை மறைமாவட்டத்தில் பணிபுரியும் துறவறத்தாருக்கு மறைமாவட்டத்தின் சார்பாக நன்றி கூறி மகிழ்வதோடு உங்களது பணிவாழ்வில் நாங்களும் உடனிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே இந்த இதழ் உங்களுக்காகவே அர்ப்பணமாக்கப்படுகிறது.

 

இயேசுவின் தோழமையில்,

அருட்பணி. பால் பிரிட்டோ

More Articles

எவ்வளவு தைரியம் உங்களுக்கு?

“நீங்கள், உங்கள் குழந்தைகளை எல்லாவற்றையும்விட அன்பு செய்யுங்கள், என்று சொல்லுகிறீர்கள்; ஆனால், எங்கள் முன்பாகவே, எங்களின் எதிர்காலத்தையே, சூறையாடுகிறீர்களே! இது எந்த விதத்தில் நியாயம்?”
- கிரேட்டா தூர்ன்பெர்க். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் …

01-Nov 2019
01-Nov 2016

வரலாறு படைக்கும் குழந்தை உள்ளம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ந் தேதியை தேசிய குழந்தைகள் தினமாக நமது நாடு கொண்டா…

01-Sep 2016

உன் இல்லத்திற்கு போய் உன் குடும்பத்தை அன்பு செய்

தொலைவில் இருப்பவர்களை அன்புசெய்வது எளிது; ஆனால் அருகில் இருப்பவர்களை கண்டு கொள்வது…

01-Jul 2016

உங்களத்தான் கடவுளா நம்பியிருக்கிறேன்!

“எங்கெல்லாம் மருத்துவக்கலை நேசிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் மனித நேயம் நிலைத்தி…

New Published Books