நம்மை அழைத்த இறை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்!
“பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அந்த பாவிகளுள் முதன்மையான பாவி நான்” ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார்’ என்று (1திமொ 2:15) கூறுகிறார் தூய பவுலடியார். எனவே மிகுதியான அறுவடை செய்ய மதுரை மறைமாவட்டத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. அறுவடை செய்யும் ஆட்களை பக்குவப்படுத்தி தேர்வு செய்வது இறை அழைத்தல் முகாம்
இடம் : நொபிலி மறைப்பணி நிலையம், மதுரை.
நாள் : ஏப்ரல் 28 மாலை 4.00 மணி முதல் ஏப்ரல் 29 மாலை 4.00மணி வரை
பங்கேற்போர் : 9, 10, 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளவர்கள், கல்லூரி பயில்பவர்கள்.
கொண்டு வரவேண்டியவை : திருவிவிலியம், குறிப்பேடு, எழுதுகோல், தங்குவதற்கு தேவையான உடைகள் விளையாடுவதற்குத் தேவையான கால்சட்டை ஆகியன.
முகாம்களில் பங்கேற்க வருபவர்கள், பங்கு தந்தையின் கடிதத்துடன் குறிப்பிட்ட நாளில் மாலை 4.00 மணிக்கு முன்பு நொபிலி மறைப்பணி நிலையத்திற்கு வந்து சேருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
தந்தை.அருள்
செயலர், இறை அழைத்தல் பணிக்குழு
தொடர்பு எண் : 94436 74553

Spiritual Category
Religious Category