நம்மை அழைத்த இறை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்!
“பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அந்த பாவிகளுள் முதன்மையான பாவி நான்” ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார்’ என்று (1திமொ 2:15) கூறுகிறார் தூய பவுலடியார். எனவே மிகுதியான அறுவடை செய்ய மதுரை மறைமாவட்டத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. அறுவடை செய்யும் ஆட்களை பக்குவப்படுத்தி தேர்வு செய்வது இறை அழைத்தல் முகாம்
ஏப்ரல் 14-16 திங்களில் மதுரை உயர்மறைமாவட்டத்தில் அருட்பணியாளராக வேண்டும் என்ற ஆர்வத்துடன் உள்ள மாணவர்களுக்காக இறையழைத்தல் முகாமானது நடைபெறவுள்ளது.
இறை அழைத்தல் முகாம்
இடம் : நொபிலி மறைப்பணி நிலையம், மதுரை
நாள் : ஏப்ரல் 14 மாலை 4.00 மணி முதல் ஏப்ரல் 16 மாலை 4.00 மணி வரை
பங்கேற்போர் : 9, 10, 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளவர்கள், இறுதி ஆண்டுகல்லூரி பயிலுபவர்கள்.
கொண்டு வரவேண்டியவை : திருவிவிலியம், குறிப்பேடு, எழுதுகோல், தங்குவதற்கு தேவையான உடைகள், விளையாடுவதற்குத் தேவையான கால்சட்டை ஆகியவை.
கடந்த முகாம்களில் பங்கேற்றவர்களையும், இதில் பங்கேற்பதற்கு ஊக்கப்படுத்துங்கள்.

Spiritual Category
Religious Category