தலித் கிறிஸ்தவர்களை SC பட்டியலில் இணைக்க வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
COMMISSIONS NEWS - COMMISSION FOR SC/ST NEWS |

ஆகஸ்ட் 10 கருப்பு நாளை முன்னிட்டு 10.08.2017 அன்று மதுரை உயர் மறைமாவட்ட சசி/ST பணிக்குழு ஒருங்கிணைப்பில் தலித் கிறித்தவர்களை SC பட்டியில் இணைக்க வலியுறுத்தி நமது மறைமாவட்டத்தின் மறைவட்டங்களிலும் மறைவட்ட அதிபர்கள் தலைமையிலும் மறைவட்ட பங்கு தந்தையர்கள் முன்னிலையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்று திட்டமிட்டு களப்பணி முன்னெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் தேனி (பெரியகுளம்), மதுரை (கோ. புதூர்) ஆகிய இரண்டு மறைவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது.மதுரையில் சுமார் 600 பேரும், தேனியில் (பெரியகுளம்) சுமார் 1500 பேரும் பங்கேற்றனர். மறைவட்ட அதிபர் தந்தையர்கள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்கள். பங்கு தந்தையர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் எழுச்சியுரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனுடைய நகல் பிரதமர், ஜனாதிபதி மத்திய மாநில SC/ST பிரிவு மற்றும் Chief secretariat, Tamil Nadu ஆகியோருக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அருட்பணி. ச. சந்தன சகாயம்
செயலர்
SC/ST பணிக்குழு
மதுரை உயர்மறைமாவட்டம்

More News

New Published Books